Home /News /lifestyle /

Masala Idly | ருசியான மசாலா இட்லி செய்முறை!

Masala Idly | ருசியான மசாலா இட்லி செய்முறை!

இட்லியை கொண்டு மசாலா இட்லியை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இட்லியை கொண்டு மசாலா இட்லியை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இட்லியை கொண்டு மசாலா இட்லியை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
காலையில் சுட சுட இட்லி செய்து சாப்பிடுவோம். அந்த இட்லி மிச்சம் ஆனதுனா இட்லி உப்புமா செய்ய தெரியும். ஆனால், மசாலா இட்லினா என்ன? செய்ய தெரியுமா?

தேவையான பொருட்கள்:

ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - 2

தேவைக்கேற்ப கறிவேப்பிலை, கடுகு
கடலைபருப்பு

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

இட்லி - 5

கொத்தமல்லி - தேவையான அளவு

உப்பு - சுவைக்கு

மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்



செய்முறை :

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

மேலும் படிக்க... ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்ய ரெசிபி...

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும். கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்போது மசாலா இட்லி ரெடி.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food

அடுத்த செய்தி