• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோடைகால விருந்தாகும் மாம்பழ ரெசிபிகள்..! வீட்டில் இன்னைக்கே டிரை பண்ணுங்க..!

கோடைகால விருந்தாகும் மாம்பழ ரெசிபிகள்..! வீட்டில் இன்னைக்கே டிரை பண்ணுங்க..!

மாம்பழ ரெசிபிகள்

மாம்பழ ரெசிபிகள்

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் மாம்பழ சீசனும் ஆரம்பித்துள்ளது

  • Share this:
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் மாம்பழ சீசனும் ஆரம்பித்துள்ளது. மாம்பழத்தில் நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. மேலும் இதில் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. மாம்பழத்தை கொண்டு தயார் செய்யப்படும் எளிய ரெசிபிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

மாம்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 2
குளிர்ந்த பால் - 2 கப்
வென்னிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 3 ஸ்பூன்



செய்முறை :

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.ன்பு அதில் பால் மற்றும் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால், மாம்பழ மில்க் ஷேக் ரெடி!

ஆரஞ்சு, எலுமிச்சை தோலை தூக்கி எறியாதீர்கள்... வீட்டில் பல பொருட்களை சுத்தம் செய்ய பயன்படும்..!

 

மாம்பழ ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள் :

மாம்பழ சாறு – 2 கப்,
சர்க்கரை – 4 கப்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்,
கேசரி பவுடர் – 2 சிட்டிகை,
மேங்கோ எசன்ஸ் – இரண்டு துளிகள்,
தண்ணீர் – தேவையான அளவு



செய்முறை :

முதலில் ஒரு வாணலில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். இத்துடன் மாம்பழ சாற்றை சேர்த்துக் கலக்கி, மேங்கோ எசன்ஸ் மற்றும் கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதை பாட்டில்களில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து தண்ணீருடன் கலந்து அருந்தலாம். கோடைகாலத்திற்கு இதமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: