முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புளிப்பு சுவையில் மாங்காய் சர்பத் : நாவூற வைக்கும் ரெசிபி..!

புளிப்பு சுவையில் மாங்காய் சர்பத் : நாவூற வைக்கும் ரெசிபி..!

புளிப்பு சுவையில் மாங்காய் சர்பத்

புளிப்பு சுவையில் மாங்காய் சர்பத்

நீங்களும் மாங்காய் பிரியர் எனில் இந்த மாங்காய் சர்பத் உங்களுக்கான ரெசிபி தான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைகாலம் என்றாலே முதலில் எதிர்பார்ப்பது மாங்காய் தான். புளிப்பு, உடல் சூடு என எத்தனை சொன்னாலும் அதன் பெயரைக் கேட்டாலே ருசி பார்க்க எச்சில் ஊறும். அப்படி நீங்களும் மாங்காய் பிரியர் எனில் இந்த மாங்காய் சர்பத் உங்களுக்கான ரெசிபி தான். எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 2

சர்க்கரை – தேவையான அளவு

உப்பு

சீரகத்தூள் – 1ஸ்பூன்

செய்முறை :

முதலில் மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

வடிகட்டிய மாங்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

மாங்காய் வெந்து வரும் போது சீரகத்தூள் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இறக்கவும். ஒரு கரண்டி மாங்காய் பாகு உடன் ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சுவையான மாங்காய் சர்பத் வித்தியாசமான சுவையில் கோடைக்கால விருந்தாக இருக்கும்.

First published:

Tags: Mango, Nannari Sarbath, Summer tips