ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Tamil New year Recipe : மாங்காய் ரசம் செய்ய ரெசிபி!

Tamil New year Recipe : மாங்காய் ரசம் செய்ய ரெசிபி!

மாங்காய் ரசம்

மாங்காய் ரசம்

Mango Rasam Recipe | மாங்காய் சீசன் என்பதால் அனைவரது வீட்டிலும் மாங்காய் நிச்சயம் இருக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு சட்னி, சாம்பார், குழம்பு என்று மட்டுமின்றி, ரசம் கூட வைக்கலாம். இந்த பதிவில் மாங்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாங்காய் ரசம் புளிப்பு சுவையுடன் ருசியாக இருக்கும். தமிழ் புத்தாண்டில் ஆறு சுவையும் சமைக்கும் பழக்கம் தமிழர்களின் பாரம்பரியத்தில் உள்ளது. அதனால் தென் மாவட்ட மக்கள் பெரும்பாலும் தமிழ் புத்தாண்டு அன்று மாங்காயில் சாம்பார், பச்சடி ரசம் செய்வது வழக்கம்.  இப்போது அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1

வெல்லம் - 1 துண்டு

மிளகு - 3 டீஸ்பூன்

சீரகம் - 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 2-3

தேங்காய் - 1 கப் (துருவியது)

கடுகு - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 1

தண்ணீர் - 1 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் வேக வைத்த மாங்காயில் இருந்து சாற்றினை வடிகட்டி, அதனை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து, பின் குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, காய்ந்ததும் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, பின் இறக்கி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும். அதன் பிறகு மாங்காய் நீரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், பவுடர் மற்றும் வெல்லத்தை சேர்த்து கலந்து கொதிக்க விட வேண்டும்.

மேலும் படிக்க...Tamil New Year Recipe | வேப்பம்பூ பச்சடி செய்வது எப்படி?

இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், சுவையான மாங்காய் ரசம் ரெடி.

First published:

Tags: Food, Tamil New Year