Home /News /lifestyle /

இந்த சம்மருக்கு அட்டகாசமான மாங்காய் ஊறுகாய்.. பக்குவமாய் செய்யலாம் வாங்க!

இந்த சம்மருக்கு அட்டகாசமான மாங்காய் ஊறுகாய்.. பக்குவமாய் செய்யலாம் வாங்க!

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

கடைகளில் விற்கப்படும் ஊறுகாய் போல் அல்ல, கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறுக்கப்படும் மாங்காய் தொக்கு போலான ஊறுகாய்

    அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள மாங்காய் ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான மாங்காய் ஊறுகாய் வீட்டிலே செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையான் நேரத்தில் யூஸ் பண்ணிக்கலாம். அதிலும் கடைகளில் விற்கப்படும் ஊறுக்காய் போல் அல்ல, கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறுக்கப்படும் மாங்காய் தொக்கு போலான ஊறுகாய். எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

    இந்த மாங்காய் ஊறுகாய் ரெசிபி வீடியோ ஸ்ரீ தமிழ் சேனல் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊறுகாய் வெறும் தயிர் சாதத்திற்கு மட்டுமில்லை, சாம்பார் சாதம், ரசம் சாதம், தோசைக்கு கூட அட்டகாசமாக இருக்கும் .

    கல்யாண வீட்டு பிரட் அல்வா.. இதை செய்வது இவ்ளோ ஈஸியா!

    தேவையான பொருட்கள்:

    மாங்காய், கடுகு, வெந்தயம், நல்லெண்ணெய், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், உப்பு, மிளகாய் தூள்.

    செய்முறை:

    1. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    2. பின்பு கடுகு மற்றும் வெந்தயத்தை கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அதை பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை மாங்காய் தூண்டுகளுடன் சேர்க்க வேண்டும்.

    3. அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.



    4. பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய் பெருங்காய தூள் சேர்த்து தாளித்து அந்த தாளிப்பை மாங்காய் கலவையுடன் சேர்க்க வேண்டும்.

    5. இதை அப்படியே மூடி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது கைப்படாமல் பக்குவமாய் பரிமாறினால் சூப்பரான டேஸ்டியான மாங்காய் ஊறுகாய் ரெடி.

    இதில் வினிகர், எலுமிச்சை சாறு சேர்க்கவில்லை அதனால் பயப்படாமல் குழந்தைகளும் சாப்பிடலாம். அதே போல் கடையில் வாங்கும் ஊறுகாயை விடவும் வீட்டிலே தயாரிக்கப்படும் இதுப்போன்ற ஊறுகாய் ஆரோக்கியமானது. உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food recipes, Mango, Oil food

    அடுத்த செய்தி