வயிற்றுப்புண் , வாய் புண்களை போக்கும் மணத்தக்காளி வத்த குழம்பு : எப்படி செய்ய வேண்டும்..?

மணத்தக்காளி வத்த குழம்பு

இதை வாரத்தில் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரையாகவோ அல்லது அதன் காய வைத்த வத்தலையோ குழம்பாக செய்து சாப்பிடலாம்.

  • Share this:
மணத்தக்காளியில் பல் நன்மைகள் உள்ளன. குறிப்பாக வயிற்றுப் புண்கள், வாய் புண்களை ஆற்றும் சக்தி மணத்தக்காளியில் இருக்கிறது. இதை வாரத்தில் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரையாகவோ அல்லது அதன் காய வைத்த வத்தலையோ குழம்பாக செய்து சாப்பிடலாம். அந்த வகையில் மணத்தக்காளி வத்தல் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்
சின்ன வெங்காயம் -5
பூண்டு - 7 பற்கள்
தக்காளி - 1
கடுகு - 1/4 tsp
கடலைப்பருப்பு - 1/4 tsp
வெந்தயம் - 1/4 tsp
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய் தூள் - 3 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 4 tbsp
உப்பு - சிறிதளவுசெய்முறை :

முதலில் கடாய் வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் சேருங்கள். சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்தமிளகாய் கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்.

பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதோடு மணத்தக்காளி வத்தலையும் சேர்த்து வதக்குங்கள். 10 நிமிடங்கள் கழித்து தக்காளி சேருங்கள்.

புளி , தக்காளி இல்லாமல் ரசம் வைக்க தெரியுமா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க..!

அடுத்ததாக மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளி கரைசலை சேருங்கள். போதுமான அளவு உப்பு சேர்த்து தட்டுபோட்டு மூடிவிடுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published: