கோடை மழையின் குளுர்ச்சியில் இலயித்துக் கொண்டிருக்கும் மாலை வேளையில் இந்த கார போண்டாவை சுட்டுக்கொடுத்தால் குழந்தைகள், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கார போண்டாவின் தனித்துவம் என்பது அதை கடிக்கும்போது வரும் மொறு மொறு சத்தம்தான். பின் அதன் சுவை ஆஹா.. ஓஹோ என சொல்லிக்கொண்டே சுவைக்கத் தூண்டும்.
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1 tsp
பெருங்காயத்தூள் - 1/2 tsp
எண்ணெய் - 200 கிராம்
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஊறியதும் மீண்டும் ஒரு முறை அலசிவிட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அந்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி , பெருங்காயத்தூள், உப்பு என சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் வைத்து அது சூடானதும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.
பின் அவை பொன்னிறமாக வரும் வரை வறுத்து கிண்ணத்தில் போட வேண்டும்.
அவ்வளவுதான் கார போண்டா தயார். இதற்கு காரச்சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.