Home /News /lifestyle /

சர்க்கரைவள்ளி கிழங்கில் டேஸ்டியான காரக்குழம்பு ரெசிபி : மிஸ் பண்ணிடாதீங்க...

சர்க்கரைவள்ளி கிழங்கில் டேஸ்டியான காரக்குழம்பு ரெசிபி : மிஸ் பண்ணிடாதீங்க...

சர்க்கரைவள்ளிக்கிழங்கு குழம்பு

சர்க்கரைவள்ளிக்கிழங்கு குழம்பு

அதன் சுவையை இப்படி காரசாரமான சுவையில், புளிப்பு சுவை கலந்து சாப்பிட்டிருக்க மாட்டீங்க.. இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வேக வைத்து சாப்பிடுவதையே பெரும்பாலும் விரும்புவார்கள். ஆனால் அதன் சுவையை இப்படி காரசாரமான சுவையில், புளிப்பு சுவை கலந்து சாப்பிட்டிருக்க மாட்டீங்க.. இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...

தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளி கிழங்கு - 250 கிராம்
நல்லெண்ணெய் - 3 tbsp
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
உளுந்து - 1/2 tsp
வெந்தயம் - 1/4 tsp
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தே.அ

வறுத்து அரைக்க :

நல்லெண்ணெய் - 3 tsp
சீரகம் - 1 tsp
துவரம் பருப்பு - 1 tsp
தனியா - 2 tsp
மிளகு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து



செய்முறை :

முதலில் புளியை ஊற வைத்துவிடுங்கள். சர்க்கரைவள்ளியை தோல் சீவி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து வறுத்து அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

மீந்து போன சாதத்தில் பஞ்சு போன்ற இடியாப்பமா..? பத்தே நிமிடத்தில் செய்ய ரெசிபி...

பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கை போட்டு பிரட்டி வதக்குங்கள்.

பின் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பாதியளவு கிழங்கை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் புளி மற்றும் அரைத்த பொடியை சேர்த்து கலந்துவிடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

10 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் குழம்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சர்க்கரைவள்ளிக்கிழங்கு குழம்பு தயார்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food, Sweet Potato

அடுத்த செய்தி