கட்லெட் இன்று சாட் வகைகளில் முக்கியமான உணவாக மாறிவிட்டது. அதை ஆரோக்கியமான வகையிலும் செய்து சாப்பிடலாம் என்பதால் யார் வேண்டுமென்றாலும் சுவைக்கலாம். அந்த வகையில் வேர்க்கடலையை வைத்து கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேர்கடலை - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1
பிரெட் துண்டு - 2
ரஸ்க் - 6
பச்சை மிளகாய் - 4
உப்பு - 1/3 tsp
எண்ணெய் - 5 tsp
கொத்தமல்லி - 1 கொத்து
இஞ்சி - 1 துண்டு
செய்முறை :
வேர்க்கடலையை கடாயில் வறுத்து அதன் தோலை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் பொடி செய்துகொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கை முதலில் மசிய வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் தோல் நீக்கி நன்கு பிசைந்துக்கொள்ளுங்கள்.
அதடுடன் இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து அதையும் உருளைக்கிழங்குடன் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
மிக்ஸி ஜாரில் 4 பச்சை மிளகாய் , இஞ்சி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
இந்த உணவு வகைகளை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும்..?
இந்த விழுதை உருளைக்கிழங்குடன் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
இப்போது வேர்க்கடலை பொடியையும் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து அதை ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது பிசைந்த ஸ்டஃபில் ஒரு உருண்டை எடுத்து அதை தட்டையாக தட்டிக்கொள்ளுங்கள்.
பின் அதை ரஸ்க் தூளில் தடவி பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் வையுங்கள்.
இரண்டு புறங்களிலும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கட்லெட் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.