ஒவ்வொரு நாள் காலையிலும் இட்லி, தோசைதான் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். எனக்கு அதை தவிற வேறு எதுவும் செய்யத் தெரியாது என நினைக்கிறீர்களா..? கவலையை விடுங்கள் அந்த அலுத்துப்போன அதே தோசையில் இப்படி வித்தியாசமான தோசை வகைகளையும் செய்யலாம். அதிலும் பச்சை பட்டாணி தோசை சுட்டுக் கொடுங்கள். வீட்டில் ரசித்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1
எண்ணெய் - 5 tsp
தயிர் - 1/2 கப்
கொத்தமல்லி - 1 கைப்பிடி
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/2 tsp
எலுமிச்சை சாறு - 1 tsp
உப்பு - தே.அ
செய்முறை :
மிக்ஸி ஜாரில் ரவை, பச்சை பட்டாணி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் , தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். ரவை அளந்த அதே கப்பில் அரை கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரையுங்கள். மைய அரைபட்டதும் ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் விரும்பு உருளைக்கிழங்கு சாதம் : இப்படி செஞ்சு கொடுங்க.. ஒரு பருக்கை கூட மிஞ்சாது...
இப்போது நறுக்கிய வெங்காயம், உப்பு, சீரகம், கொத்தமல்லி தழை கொஞ்சம். எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். மாவு கெட்டிப்பதத்தில் இருந்தால்தான் மொறுமொறு தோசை கிடைக்கும்.
மாவு ரெடியானதும் எப்போதும் போல் தோசை சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் பச்சை பட்டாணி தோசை தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.