Home /News /lifestyle /

கோதுமை மாவு இருந்தால் போதும் சுட சுட ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி... 15 நிமிட ரெசிபி இதோ...

கோதுமை மாவு இருந்தால் போதும் சுட சுட ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி... 15 நிமிட ரெசிபி இதோ...

கோதுமை கட்லெட்

கோதுமை கட்லெட்

செலவே இல்லாமல் இந்த கோதுமை மாவு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். காரசார சுவையில் அற்புதமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சில் கிளைமேட்டிற்கு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றினால் செலவே இல்லாமல் இந்த கோதுமை மாவு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். காரசார சுவையில் அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - 2 tsp
    சீரகம் - 1/2 tsp
    கறிவேப்பிலை - 2 கொத்து
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tbsp
    தக்காளி - 2
    கொத்தமல்லி - 2 கைப்பிடி
    மஞ்சள் தூள் - 1/2 tsp
    மிளகாய் தூள் - 1 tsp
    கரம் மசாலா - 1/2 tsp
    மல்லி தூள் - 1 tbsp
    உப்பு - தே.அ
    கோதுமை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 2 tbsp



    செய்முறை :

    முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொறிக்க வேண்டும்.

    பின் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.

    அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

    பின் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.

    தண்ணீர் ஊற்றக்கூடாது. உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    நட்ஸ் பாயாசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? சிம்பிளான ரெசிபி இதோ....

    இறுதியாக கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    இப்போது கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.

    கலந்ததும் அதில் வதக்கிய தொக்கு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும்.

    பின் கொஞ்சம் மாவு எடுத்து உருண்டையாக உருட்டி கட்லெட் போல் தட்டிக்கொள்ள வேண்டும்.

    பின் தோசைக்கல் வைத்து எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும். இரு புறமும் பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.

    அவ்வளவுதான் கோதுமை கட்லெட் தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Evening Snacks

    அடுத்த செய்தி