கோடைக்காலத்தில், நம்மைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்வோம். உடலில் குளிர்ச்சியை பராமரிக்க, நம் உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் உணவுகளையும் சேர்த்துக் கொள்கிறோம். இப்படி இந்த சீசனில் குல்பியையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கொளுத்தும் வெயிலுக்கு குளுர்ச்சி தருவது மட்டுமின்றி, அனைத்து வயதினரும் குல்பி விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தர்பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் குல்பி இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தர்பூசணி இந்த சீசனில் எளிதாகக் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய நினைத்தால் கண்டிப்பாக தர்பூசணி குல்பியை செய்து பாருங்கள். உங்களுக்கான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1 கப் நறுக்கியது
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
குல்ஃபி அச்சு - 2 முதல் 3 வரை
செய்முறை :
தர்பூசணி குல்பி செய்ய, முதலில் தர்பூசணியை வெட்டி அதிலிருந்து அனைத்து விதைகளையும் அகற்றவும். இப்போது அனைத்து விதைகளையும் நீக்கிய பின், சிறிய துண்டுகளாக வெட்டவும்.
இப்போது இந்த சிறிய துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும். இந்தக் கலவை எவ்வளவு தடிமனாக இருக்கிறதோ, அவ்வளவு சுவையாகவும் இருக்கும்.
நீங்கள் விரும்பினால், அதை வடிகட்டிக் கொள்ளலாம் அல்லது அப்படியே கூழ் போன்றும் பயன்படுத்தலாம்.
மேங்கோ சப்பாத்தி... கேட்கும் போதே நாவூறுதா..? அப்போ உடனே செஞ்சு சாப்பிடுங்க..!
இப்போது இந்த தர்பூசணி சாற்றில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
தயாரிக்கப்பட்ட சாற்றை குல்ஃபி அச்சில் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் அல்லது இரவில் ஃப்ரீசரில் வைக்கவும்.
இரண்டாவது நாளில், நீங்கள் விரும்பும் போது ஃப்ரீசரில் இருந்து குல்ஃபி மோல்டை எடுத்து குளிர்ச்சியாக சாப்பிடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ice cream, Watermelon