Home /News /lifestyle /

காய்கறிகள் சேர்த்த கொழுக்கட்டை : மாலையில் சூடாக செய்து சாப்பிட இதை விட வேறென்ன வேண்டும்..!

காய்கறிகள் சேர்த்த கொழுக்கட்டை : மாலையில் சூடாக செய்து சாப்பிட இதை விட வேறென்ன வேண்டும்..!

காய்கறி கொழுக்கட்டை

காய்கறி கொழுக்கட்டை

நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக அதில் காய்கறிகளையும் சேர்த்து செய்து பாருங்கள். மற்றவர்களை காட்டிலும் உங்களுடைய கொழுக்கட்டை இன்னும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டையில் இனிப்பு , காரக் கொழுக்கட்டை இருக்கும். காரக்கொழுக்கட்டை எனில் அதில் வெறும் கடலை பருப்பு மட்டும்தான் இருக்கும். நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக அதில் காய்கறிகளையும் சேர்த்து செய்து பாருங்கள். மற்றவர்களை காட்டிலும் உங்களுடைய கொழுக்கட்டை இன்னும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மாவு அரைக்க :

சிவப்பு அரிசி - 1 கப்
தண்ணீர் - 1கப்

தாளிக்க :

எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/4 tsp
சீரகம் - 1/4 tsp
கடலை பருப்பு - 1 tsp
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 3
கேரட், கோஸ் , பீன்ஸ் - 2 கப்
உப்பு - தே.அ



செய்முறை :

அரிசியை 3 மணி நேரம் ஊற வையுங்கள். பின் கழுவி மிக்ஸியில் மாவை அரைத்துவிடுங்கள்.

அடுத்ததாக தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளியுங்கள்.

பின் இஞ்சி , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக காய்கறிகளை சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து 4 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

வதக்கியதும் அதில் அரைத்த மாவை சேர்த்து பிரட்டினால் மாவு கெட்டிப் பதத்திற்கு வந்துவிடும்.

வாழைக்காயில் வறுவல் மட்டுமல்ல.... இப்படி கூட செய்து சாப்பிடலாம் : ரெசிபி இதோ...

பின் அடுப்பை அணைத்துவிட்டு மாவு சூடு கொஞ்சம் தணிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.

பின் ஸ்டீமர் அல்லது இட்லி குக்கரின் தட்டுகளில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை வைத்து 15 நிமிடங்கள் வேக வையுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து திறந்தால் காய்கறி கலந்த கொழுக்கட்டை ரெடி.

இதை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Evening Snacks, Food recipes

அடுத்த செய்தி