உப்புமா என்றாலே பலருக்கும் அலர்ஜிதான். ஆனால் அதை செய்ய வேண்டிய பக்குவத்தில் செய்தால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் காய்கறிகளை சேர்த்து பிரெட் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரட் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/2 tsp
பச்சை மிளகாய் - 1
பட்டாணி - 2 tbsp
கார்ன் - 2 tbsp
துருவிய கேரட் - 3 tbsp
குடைமிளகாய் - 1 tbsp
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே.அ
செய்முறை :
முதலில் பிரட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
பட்டாணி மற்றும் சோளத்தை தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்
பின் வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்குங்கள்.
அடுத்ததாக மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
காய்கறிகள் வெந்ததும் நறுக்கிய பிரெட் துண்டுகளை சேர்த்து பிரட்டுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
நன்கு பிரட்டி 1 நிமிடம் சிறு தீயில் வையுங்கள். பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் வெஜிடபிள் பிரெட் உப்புமா தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.