Home /News /lifestyle /

வெங்காயம், தக்காளி இல்லாமல் உளுத்தம் பருப்பை மட்டும் அரைத்து சட்னி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...

வெங்காயம், தக்காளி இல்லாமல் உளுத்தம் பருப்பை மட்டும் அரைத்து சட்னி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...

சட்னி

சட்னி

10 நிமிடத்தில் செய்ய எளிமையான ரெசிபி இதோ...

வெங்காயம் , தக்காளியை வதக்கி அரைக்க நேரம் கிடைக்காத போது எளிமையான முறையில் உங்கள் இரவு உணவை முடிக்க இந்த உளுத்தம் பருப்பு சட்னி உங்களுக்கு உதவலாம். 10 நிமிடத்தில் செய்ய எளிமையான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1/4 கப்
எண்ணெய் - 2 tbsp
பூண்டு - 2 பற்கள்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 2 tbsp
புளி - சிறிதளவு
உப்பு - தே.அ

தாளிக்க :

எண்ணெய் - 1 tbsp
சீரகம்- 1/4 tsp
கடுகு - 1/4 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

முதலில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு உளுந்தை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய் , பூண்டு , புளி, தேங்காயையும் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

அவற்றின் சூடு தணிந்ததும் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்ள். உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெறும் முருங்கைக்காயை வைத்து இப்படியொரு குழம்பு வைக்கலாமா..? உடனே செஞ்சு பாருங்க...

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மைய அரையுங்கள். இறுதியாக அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்தால் சட்னி ரெடி.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chutney

அடுத்த செய்தி