• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மணம் மயக்கும் புதினா தொக்கு - வித்தியாசமான சுவையில் இப்படி செஞ்சு பாருங்க...!

மணம் மயக்கும் புதினா தொக்கு - வித்தியாசமான சுவையில் இப்படி செஞ்சு பாருங்க...!

புதினா தொக்கு

புதினா தொக்கு

ரசம், சாம்பார், தயிர் சாதம் போன்ற உணவுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

  • Share this:
    புதினா தொக்கு ரசம், சாம்பார், தயிர் சாதம் போன்ற உணவுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    புதினா இலைகள் - 3 கப்
    கொத்தமல்லி - 1 கப்
    காய்ந்த மிளகாய் - 6
    புளி - 15 கிராம்
    துருவிய தேங்காய் - 1 tbsp
    உப்பு - தே.அ
    எண்ணெய் - 6 tbsp

    பப்பாளிக்காய் கூட்டு செஞ்சு பாத்திருக்கீங்களா...? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!



    செய்முறை :

    புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.  கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து புதினா மற்றும் கொத்தமல்லியை சுருங்க வதக்கிக்கொள்ளுங்கள். அதை சூடு குறைய காற்றாட விடுங்கள்.

    மருத்துவப் பயன்கள் கொண்ட தூதுவளை ரசம் - எப்படி செய்வது..?

    சூடு தணிந்ததும் மிக்ஸியில் காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதோடு வதக்கிய புதினா சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அதை மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த புதினாவை அதில் சேர்த்து நன்கு வதக்குங்கள். அடிபிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

    5 நிமிடங்கள் வதங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் புதினா தொக்கு தயார்.

    இதை ஃபிரிட்ஜில் வைத்து 3 நாட்களுக்குக் கூட சாப்பிடலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: