ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

செய்யும் போதே மணக்கும் தக்காளி குருமா ரெசிபி : 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்..!

செய்யும் போதே மணக்கும் தக்காளி குருமா ரெசிபி : 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்..!

தக்காளி குருமா

தக்காளி குருமா

இதை தோசை , சாப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இரவு அல்லது காலை உணவுக்கு அதிகபட்சம் இட்லி , தோசை , சப்பாத்தி தான் செய்வோம். இந்த வகை உணவுகளுக்கு சைட் டிஷுகள்தான் சுவையே. அப்படி இருக்க அதை வகை வகையாக செய்து சாப்பிட்டால்தான் நல்ல உணவை சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அந்த வகையில் நொடியில் செய்யக்கூடிய தக்காளி குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய்

வெந்தயம் - 1/4 tsp

கல்பாசி 1

கறிவேப்பிலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 10

உப்பு - தே.அ

மிளகாய் தூள் - 2 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

தக்காளி - 3

கொத்தமல்லி தழை - சிறிதளவு

அரைக்க :

தேங்காய் - 3 துண்டு

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 7

உடைத்த கடலை - 1 tsp

வெந்தயம் - 1/2 tsp

இலவங்கப்பட்டை - 1 துண்டு

கிராம்பு - 1

செய்முறை :

முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஜாரில் சேர்த்து மைய அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கல்பாசி போட்டு வதக்குங்கள்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளுங்கள்.

தக்காளியை அரைத்து அந்த விழுதை சேர்த்து நன்கு வதக்குங்கள். மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

டின்னருக்கு ஏற்ற காளான் குருமா.. இதுவரை செஞ்சதே இல்லையா...? இதோ ரெசிபி...

எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் தக்காளி குருமா தயார்.

இதை தோசை , சாப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம்.

First published:

Tags: Dinner Recipes, Tomato