ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சப்பாத்தி , நாண் ரொட்டிக்கு பொருத்துமான சோயா பனீர் மசாலா : இப்படி செய்தால் 10 நிமிடத்தில் வேலை முடிஞ்சிடும்..!

சப்பாத்தி , நாண் ரொட்டிக்கு பொருத்துமான சோயா பனீர் மசாலா : இப்படி செய்தால் 10 நிமிடத்தில் வேலை முடிஞ்சிடும்..!

சோயா பனீர் மசாலா

சோயா பனீர் மசாலா

, இந்த டோஃபு மசாலாவை மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு செய்து சாப்பிடுங்கள். செய்வது எளிது... அதன் செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!

இப்போது பலர் ஆரோக்கியம் காரணமாக பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்கின்றனர். சைவ உணவை பின்பற்றுபவர்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுகிறார்கள். அப்படி அவர்களுக்காக வந்ததுதான் டோஃபு. இதை சோயா பனீர் என்றும் சொல்வோம். இப்போது இதன் சுவையும் பலருக்கும் பிடிக்கிறது.

நீங்களும் டோஃபுவை ருசிக்க விரும்பினால், இந்த டோஃபு மசாலாவை மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு செய்து சாப்பிடுங்கள். செய்வது எளிது... அதன் செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தேவையான பொருட்கள் :

டோஃபு அல்லது சோயா பனீர் - 1 கப்

பெரிய தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2-3

இஞ்சி விழுது - 1/2 tbsp

கேப்சிகம் - 1

வெங்காயம் - 2

ஃபிரெஷ் கிரீம் - 2 tbsp

பால் - 1.5 கப்

கொத்தமல்லி தூள் - 1 tbsp

மஞ்சள் தூள் - 1/2 tbsp

சீரக தூள் - 1 tbsp

கரம் மசாலா - 1 tbsp

சிவப்பு மிளகாய் தூள் - 1 tbsp

காய்கறி மசாலா - 1 tbsp

உப்பு - தேவையான அளவு

அரை தேக்கரண்டி சீரகம் - tbsp

கசூரி மேத்தி - 1

நெய், வெண்ணெய் - 1 tbsp

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

டோஃபு மசாலா செய்ய முதலில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதன் பிறகு, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பச்சை கொத்தமல்லியை நறுக்கவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். அதனுடன் சீரகம் மற்றும் சோம்பு சேர்க்கவும்.

இப்போது வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி விழுதையும் சேர்க்கவும்.

கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

இப்போது அதில் தக்காளி மற்றும் மிளகாய் விழுதை சேர்க்கவும். குறைந்த தீயில் வதக்கவும்.

அதன் பிறகு கசூரி மேத்தியை சேர்த்து வதக்கவும். அதனுடன் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலக்கவும். அதன் பிறகு அதனுடன் பால் சேர்த்து சிறு தீயில் வேக விடவும். இடையில் கிளறிக்கொண்டே இருக்கவும்.

கொதி வந்ததும் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது அதில் டோஃபு துண்டுகளை சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.

அவ்வளவுதான் பனீர் மசாலா தயார். இதை ரொட்டி, பராத்தா, நாண் அல்லது தந்தூரி ரொட்டியுடன் சாப்பிடலாம். அதன் மேல் ஃப்ரெஷ் க்ரீமையும் தடவினால் சுவை கூடுதலாக இருக்கும்.

First published:

Tags: Paneer recipes