Home /News /lifestyle /

சூடான சாதத்துடன் பச்சை மொச்சை கடையலை பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும் : ரெசிபி இதோ...

சூடான சாதத்துடன் பச்சை மொச்சை கடையலை பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும் : ரெசிபி இதோ...

மொச்சைக்கொட்டை கடையல்

மொச்சைக்கொட்டை கடையல்

பச்சை மொச்சைக்கொட்டையில் கடையல் செய்து அதை சூடான சாதத்துடன் கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள். ருசியா மெய் மறந்து போவீங்க.

மொச்சை கொட்டையில் கருவாட்டு குழம்பு, காரக்குழம்பு செய்துதான் சாப்பிட்டிருப்பீங்க. ஆனால் இது புதுவிதமாக சற்று வித்தியாசமான சுவை. அதாவது பச்சை மொச்சைக்கொட்டையில் கடையல் செய்து அதை சூடான சாதத்துடன் கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள். ருசியா மெய் மறந்து போவீங்க.

தேவையான பொருட்கள் :

பச்சை மொச்சை - 1 கப்
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தே.அ
எண்ணெய் - 2 சொட்டு

தாளிக்க :

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
தனியா - 1டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5



செய்முறை :

முதலில் மொச்சைக்கொட்டைகளை குக்கரில் போட்டு அதோடு மஞ்சள் , உப்பு மற்றும் 2 சொட்டு எண்ணெய் விட்டு கலந்துவிடுங்கள். பின் 4 விசில் வர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இதற்கிடையில் தனியா , சீரகம் மற்றும் பூண்டை நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக இடித்து வைத்துள்ள தனியா கலவையை சேர்த்து வதக்குங்கள்.

இப்படியொரு பாயாசத்தை இதுவரை ட்ரை பண்ணி இருக்கீங்களா? குக் வித் சங்கீதா ஸ்பெஷல்!

நன்கு வதங்கியதும் அந்த கலவையை வேக வைத்து எடுத்து வைத்துள்ள மொச்சையில் சேர்க்கவும். இப்போது ஒன்றும் பாதியுமாக கடைந்துக்கொள்ளுங்கள். இ

ப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் வையுங்கள். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மொச்சைக்கொட்டை கடையல் தயார். இதற்கு காரசாரமான சைட் டிஷ் பக்காவாக இருக்கும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food recipes

அடுத்த செய்தி