• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் தந்தூரி மையோனைஸ் : எந்த ஸ்நாக்ஸுக்கும் தொட்டுக்கலாம்..!

ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் தந்தூரி மையோனைஸ் : எந்த ஸ்நாக்ஸுக்கும் தொட்டுக்கலாம்..!

தந்தூரி மையோனைஸ்

தந்தூரி மையோனைஸ்

இந்த சாஸை எப்படி செய்வது என கற்றுக்கொண்டால் வீட்டிலேயே எந்த ஸ்நாக்ஸுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

  • Share this:
தந்தூரி மயோனைஸ் மணம் மற்றும் அதன் காரத்தன்மை நாவின் மொட்டுகளை தூண்டிவிடும் அளவுக்கு சுவை மிகுந்தது. அதனால்தான் பலரும் அதை விரும்பி கேட்டு சாப்பிடுகின்றனர். இந்த சாஸை எப்படி செய்வது என கற்றுக்கொண்டால் வீட்டிலேயே எந்த ஸ்நாக்ஸுக்கும் தொட்டுக்கொள்ளலாம். இந்த தந்தூரி மயோனைஸ் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கின்றன. ஆனால் அதை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள். ரெஸ்டாரண்ட் சுவையை அப்படியே உணர்வீர்கள். இவ்வாறு செய்வதே ஆரோக்கியமும் கூட...

தேவையான பொருட்கள் :

பால் - 1/2 கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 3 ஸ்பூன்
மிளகாய் பொடி - 2-3 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
உப்பு - தே.அ
இஞ்சி பொடி - 2 ஸ்பூன்
பூண்டு பொடி - 2 ஸ்பூன்
வினிகர் - 1-2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்



செய்முறை :

பொடி வகைகளை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

மிக்ஸி பிளெண்டரில் பால், எண்ணெய் , வினிகர் , உப்பு மற்றும் கலந்து வைத்துள்ள மசாலா பொடிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பீட்ரூட் ஆலூ கட்லெட் : இன்னைக்கே செஞ்சு கொடுங்க...

பின் அதை மிக்ஸியின் நன்கு கெட்டியாகும் வரை ஓட்டுங்கள்.

பால் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள். காரம் தேவைப்பட்டால் கூட்டிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் தந்தூரி மயோனைஸ் தயார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: