முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலுக்கு இதம் தரும் கேழ்வரகு கூழ் : மாடர்ன் அம்மாக்கள் குக்கரிலேயே செய்ய ஈசி ரெசிபி..!

வெயிலுக்கு இதம் தரும் கேழ்வரகு கூழ் : மாடர்ன் அம்மாக்கள் குக்கரிலேயே செய்ய ஈசி ரெசிபி..!

கேழ்வரகு கூழ்

கேழ்வரகு கூழ்

கேழ்வரகில் இருக்கும் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவியாக இருக்கும். எனவே நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க

  • Last Updated :

வெயில் காலம் என்றாலே கிராமங்களில் கூழ்தான் பிரதான உணவாக இருக்கும். வெயிலுக்கு இதம் தருவது மட்டுமன்றி ஒரு சொம்பு குடித்துவிட்டு வயலில் இறங்கினால் உடலுக்கு எப்படிதான் அப்படியொரு ஆற்றல் வருமென்று தெரியாது. அவ்வளவு ஆற்றலும் , தெம்பும் கிடைக்கும். அதோடு பசி களைப்பு நீண்ட நேரத்திற்கு தெரியாது. கேழ்வரகில் இருக்கும் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவியாக இருக்கும். எனவே நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க

தேவையான பொருட்கள்:

ராகி - 1 கப்

வரகு அரிசி - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 5 1/2 கப்

செய்முறை

ராகி மாவை  மூன்று கப் தண்ணீர் கலந்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் ராகி மாவு நன்கு ஊறியிருக்கும். அதுதான் கூழின் சுவைக்குக் காரணம்.

அதை குக்கரில் அப்படியே தண்ணீரோடு மாற்றுங்கள். அதில் வரகு அரிசி , தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

2 கப் தண்ணீர் கலந்துகொள்ளுங்கள். கரண்டியை வைத்து நன்குக் கலந்துகொள்ளுங்கள். குக்கரை மூடிவிடுங்கள்.

பிக்பாஸ் வனிதா ஸ்டைலில் இன்ஸ்டன்ட் மேகி : காரசாரமான சுவையில் செம்ம டேஸ்ட்..! டிரை பண்ணி பாருங்க

குறைந்த தீயில் மூன்று விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். பிரெஷர் முற்றிலும் இறங்கியதும் விசிலை நீக்கிவிட்டு குக்கரைத் திறங்கள்.

தற்போது மத்து வைத்து நன்கு மசியுங்கள். அதேசமயம் தயிர் சேர்த்து மீண்டும் மத்தில் கடைந்து கலக்குங்கள்.

கூழ் கட்டியாக இருந்தால் மோர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் அதில் வெங்காயமும் சேர்த்துக்கொள்ளலாம்.

அவ்வளவுதான் கூழ் தயார்.

இதற்கு சைட்டிஷாக ஊறுகாய், மோர் மிளகாய் பொருத்தமாக இருக்கும்.

First published:

Tags: Koozh, Ragi