நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முளைகட்டிய நவதானிய சூப் : மாலையில் டீக்கு பதில் செய்து சாப்பிடுங்கள்..!

முளைகட்டிய நவதானிய சூப்

இதை வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்க இந்த நவதானிய சூப் உதவுகிறது.

 • Share this:
  முளைகட்டிய பயறு நார்ச்சத்தும், உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் கொடுக்கிறது. இதை வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்க இந்த நவதானிய சூப் உதவுகிறது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் : 

  முளைகட்டிய பயறு - 1 கப்
  பூண்டு - 2 பற்கள்
  வெங்காயம் - 1
  சீரகம் - 1 tsp
  தனியா - 1 tsp
  மிளகு - 1/2 tsp
  தேங்காய் பால் - 1 கப்
  புளிக்காத தயிர் - 1/2 கப்
  கொத்தமல்லி - தே.அ
  உப்பு - தே.அ  செய்முறை :

  முளைக்கட்டிய பயறுகளை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  தேங்காய் அரைத்து அதன் பாலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  பின் வேக வைத்த பயறு 2 ஸ்பூன் அதோடு பூண்டு, தனியா வெங்காயம், சீரகம், மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

  பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

  பின் வேக வைத்த பயறை தண்ணீரோடு ஊற்றி கொதிக்க வையுங்கள்.

  மூக்கடலையை வேக வைத்து அப்படியே சாப்பிடுவதை விட இப்படி சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்..!

  சூப் பதத்திற்கு கொதித்ததும் எடுத்து வைத்திருக்கும்  தேங்காய் பாலை ஊற்றி கலந்துவிட்டு ஒரு கொதி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.

  பரிமாறும்போது கெட்டித்தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்துவிட்டு இந்த சூப்பையும் ஊற்றி மிளகு தூவி கொடுங்கள். சுவை அனைவரையும் நாவூற வைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவ்வளவுதான் முளைக்கட்டிய நவதானிய பயறு சூப் தயார்.

   
  Published by:Sivaranjani E
  First published: