சிறுகீரை பருப்புக்கூட்டு: வித்தியாசமான சுவையில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க..

5. பருப்பு : உங்கள் குழந்தைகள் உணவில் பருப்பு வகைகளை சேர்க்கலாம். ஏனெனில் பருப்பு புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும் இதனை அரிசி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பு என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பருப்பு வகையை சமைத்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறலாம். சப்பாத்திக்கு தால் வகை ரெசிபிக்களை சைடிஷாக கொடுக்கலாம். பருப்பு போலி, பருப்பு உருண்டை குழம்பு, பருப்புகள் நிறைந்த அடை தோசை ரெசிபிக்கள் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான உணவாக இருக்கும் என்பதால் இதனை அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சிறுகீரை பருப்புக்கூட்டுக்கு பொருத்தமாக உருளைக்கிழங்கு வருவல், அப்பளம் என செய்து வைத்தால் மதிய உணவு அட்டகாசமாக இருக்கும்.

  • Share this:
    மதிய உணவுக்கு சிறு கீரை பருப்புக்கூட்டு சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு பொருத்தமாக உருளைக்கிழங்கு வருவல், அப்பளம் என செய்து வைத்தால் மதிய உணவு திருப்தியாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1 1/2 கப்
    சிறு கீரை - 1 கப்
    நெய் - 1 tsp
    கடுகு - 1 tsp
    சீரகம் - 1 tsp
    பிரிஞ்சு இலை - 1 tsp
    வெங்காயம் - 1 tsp
    பூண்டு - 4
    இஞ்சி - 1 இஞ்ச்
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் பொடி - 1 tsp
    மஞ்சள் - 1/2 tsp
    உப்பு - தே.அ
    எலுமிச்சை சாறு - 1



    செய்முறை :

    கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பருப்பையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

    குக்கரில் நெய் விட்டு சிறு தீயில் வையுங்கள். கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம், பிரிஞ்சு இலை போடுங்கள்.

    அடுத்ததாக வெங்காயம் , இஞ்சி, பூண்டு சேருங்கள். நன்கு வதக்குங்கள்.

    காலை உணவை ஹெல்தியாக்க ’ஊத்தாப்பம்’ - சுவையாக செய்ய ரெசிபி

    பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேருங்கள். வதங்கியதும் மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்ததும் கீரையையும், பருப்பையும் கொட்டிக் கிளறுங்கள். 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடுங்கள். 4 - 5 விசில் வரும் வரை காத்திருங்கள்.

    விசில் முடிந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிரஷர் தானாக அடங்கியதும் குக்கரை திறந்து பதம் பாருங்கள்.

    உங்களுக்குத் தேவையான கெட்டிப்பதம் இல்லை எனில் அடுப்பில் குக்கரை வைத்து கொதிக்கவிடுங்கள். தண்ணீர் இறுகியதும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிவிடுங்கள்.

    மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றியதும் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறுங்கள்.
    Published by:Sivaranjani E
    First published: