ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சப்போட்டா பழத்தில் அல்வா கூட செய்யலாமா..? டேஸ்டை சுவைக்க ரெசிபி இதோ...

சப்போட்டா பழத்தில் அல்வா கூட செய்யலாமா..? டேஸ்டை சுவைக்க ரெசிபி இதோ...

சப்போட்டா பழத்தில் அல்வா

சப்போட்டா பழத்தில் அல்வா

சப்போட்டாவில் இப்படி வித்தியாசமான சுவையில் அல்வா செய்து சாப்பிட்ட நினைத்திருக்கிறீர்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... இதோ உங்களுக்கான ரெசிபி...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சப்போட்டா என்றாலே அதை அப்படியே சாப்பிடுவது அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடுவது என்றுதான் யோசிப்போம். ஆனால் இப்படி வித்தியாசமான சுவையில் அல்வா செய்து சாப்பிட்ட நினைத்திருக்கிறீர்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... இதோ உங்களுக்கான ரெசிபி...

  தேவையான பொருட்கள் :

  சப்போட்டா பழம் - 1/4 கிலோ

  முந்திரி - 10

  நெய் - 2 tbsp

  ரவை - 1/2 கப்

  வெல்லம் - 1 கப்

  செய்முறை :

  சப்போட்டா பழத்தின் தோல் நீக்கி அதன் சதையை தனியாக எடுத்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  இப்போது கடாய் வைத்து நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  பின் அதே கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

  5 நிமிடத்தில் சுவையான வாழைப்பழ பஜ்ஜி ரெடி... இதோ சிம்பிள் ரெசிபி டிப்ஸ்...

  பின் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு வேக வையுங்கள். வெந்ததும் அரைத்த சப்போட்டா பேஸ்ட் சேர்த்து அதோடு வெல்லம் சேர்த்து கிளறிவிடுங்கள்.

  பின் நெய் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க சுருங்கி அல்வா பதத்திற்கு வரும். இறுதியாக வறுத்த முந்திரியை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் சப்போட்டா அல்வா தயார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Sweet recipes