Home /News /lifestyle /

நோன்பு திறக்கும்போது இதை செய்து கொடுங்கள்.... இதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது..!

நோன்பு திறக்கும்போது இதை செய்து கொடுங்கள்.... இதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது..!

சேமியா கஸ்டர்ட் ஃபலூடா

சேமியா கஸ்டர்ட் ஃபலூடா

நோன்பு இருக்கும்போது உடலின் நீரிழப்பு இன்று உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள உதவும். அதேபோல் இது கோடைக்காலம் என்பதால் குளுர்ச்சியாகவும் விரும்புவார்கள்.

நோன்பு சமயத்தில் அதிகமாக நீர்ச்சத்து உணவுகளையே சாப்பிடுவார்கள். ஏனெனில் அதுதான் நோன்பு இருக்கும்போது உடலின் நீரிழப்பு இன்று உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள உதவும். அதேபோல் இது கோடைக்காலம் என்பதால் குளுர்ச்சியாகவும் விரும்புவார்கள். அந்த வகையில் பழங்கள் கலந்த இந்த சேமியாகஸ்டர்ட் செய்து கொடுங்கள். நோன்பு திறக்கும்போது முழுமையான உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

நெய் - 1 tsp
சேமியா - 1/4 கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
கர்ஸ்டர்ட் பவுடர் - 1 tsp
பால் - 1/2 கப்
சப்ஜா விதை - 1 tsp
நட்ஸ் - 2 tsp
மாதுளை , திராட்சை , ஆப்பிள் - 1/2 கப்



செய்முறை :

முதலில் கடாய் வைத்து அதில் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் பாலை தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

பாலை இப்போது வறுத்த சேமியாவில் சேர்த்து கிளறிவிட்டு கொதிக்கவிடுங்கள்.

பால் கொதிக்கும்போதே சேமியா வெந்துவிடும். சேமியா குழைய வேகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கஸ்டர்ட் பவுடரை அரை கப் பாலில் கட்டிகளின்றி கரைத்துக்கொள்ளுங்கள்.

அதை இப்போது கொதிக்கும் சேமியா பாலில் கொஞ்சம் கொஞ்சமாக கிளறிவிட்டுக்கொண்டே சேர்த்து கிளறுங்கள். இந்த சயமத்தில் தீயை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கை எடுக்காமல் நன்கு கிளறிக்கொண்டே இருந்தால் பால் கெட்டிப்பதம் வந்துவிடும்.

பின் அடுப்பை அணைத்துவிட்டு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்போது பழங்கள், நட்ஸ் மற்றும் ஊற வைத்த சப்ஜா விதைகளை தயார் செய்துகொள்ளுங்கள்.

பொங்கலுக்கு எந்த மாதிரியான சாம்பார் வைக்க வேண்டும் தெரியுமா? இதோ ரெசிபி!

கண்ணாடி கிளாஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில் மாதுளையை அடியில் கொஞ்சம் சேருங்கள்

பின் சேமியா கஸ்டர்ட் இரண்டு ஸ்பூன் ஊற்றுங்கள். பின் திராட்சை மற்றும் நட்ஸ் சேருங்கள்.

அடுத்ததாக மீண்டும் சேமியா கஸ்டர்ட் சேருங்கள். மீண்டும் ஆப்பிள் மாதுளை சேர்த்து அதன் மேல் மீண்டும் கஸ்டர்ட் சேமியா சேர்த்துக்கொள்ளுங்கள். பின் சப்ஜா விதைகளை 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் கொஞ்சம் சேமியா சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்கூப் வன்னிலா ஐஸ் கிரீம் வைத்து அதன் மேல் நட்ஸ் தூவி கொடுங்கள்.

நோன்பு திறக்கும்போது இதைக் குடித்தால் நல்ல சுவையாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fasting, Iftar Special Recipes

அடுத்த செய்தி