ரெஸ்டாரண்ட் சுவையில் இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். இதன் சுவை உங்களை மெய் மறக்கச் செய்யும். இந்த ரெசிபில் உள்ள ஷாஹி என்றால் ராயல் என்று அர்த்தமாம். எனவே மிகவும் ராயலான இந்த டிஷை எப்படி எளிமையான முறையில் வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பனீர் - 200 கிராம்
ஃபிரெஷ் கிரீம் - 1 tbsp
கசூரி மேத்தி - சிறிதளவு
மிளகாய் தூள் - 3/4
தனியா பொடி - 1/2 tsp
கரம் மசாலா - 1/4 tsp
சர்க்கரை - 1/4 tsp
ஏலக்காய் பொடி - 1/4 tsp
ரோஸ் வாட்டர் - 1/4 tsp
உப்பு - தே.அ
காய்ச்சிய பால் - 1 கப்
அரைக்க வேண்டியவை :
வெங்காயம் - 2
முந்திரி - 2 tbsp
பாதாம் - 2 tbsp
பூசணி விதை - 1 tbsp
தண்ணீர் - 2 கப்
தாளிக்க :
வெண்ணெய் - 1 tbsp
சோம்பு - 1/2 tbsp
ஏலகாய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
இஞ்சி - 1/2 துண்டு
பிரிஞ்சு இலை - 1
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
கொதி வரும் சமயத்தில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்கள் வேக வையுங்கள். பின் அதன் சூடு தணிந்ததும் மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பி, ஏலக்காய், கிராம்பு , பட்டை , துருவிய இஞ்சி சேர்த்து வதக்குங்கள்.
பின் அரைத்த பேஸ்டை சேர்த்து தண்ணீர் இறுகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா, தனியா பொடி சேர்த்து மீண்டும் பிரட்டுங்கள்.
ஏதாவது சாப்பிடனும் போல் உள்ளது என கேட்குக் குழந்தைகளுக்கு இந்த பிரெட் ரோல் செய்து கொடுங்கள்..
பின் பால் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கொதிநிலைக்கு வரும்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடுங்கள்.
இப்போது பனீரை ஒவ்வொன்றாக சேர்த்து பிரட்டி விடுங்கள். 1 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.
பின் இறுதியாக கசூரி மேத்து தூவி அதை சுற்றிலும் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து கூடுதலாக ரோஸ் வாட்டரையும் ஊற்றினால் ஷாஹி பனீர் தயார்.
இந்த சுவை மிகுந்த ராயல் ஷாஹி பனீரை குடும்பத்தினருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.