முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ரோட்டுக்கடை சால்னா ரொம்ப பிடிக்குமா... அதே சுவையில் வீட்டிலும் செய்ய எளிமையான ரெசிபி இதோ...

ரோட்டுக்கடை சால்னா ரொம்ப பிடிக்குமா... அதே சுவையில் வீட்டிலும் செய்ய எளிமையான ரெசிபி இதோ...

ரோட்டுக்கடை சால்னா

ரோட்டுக்கடை சால்னா

அப்படி என்னதான் போட்டு சமைக்கிறார்கள் என்று உங்களுக்கும் சந்தேகம் இருந்தால்.. இனிமேல் யோசிக்காதீங்க... இந்த ரெசிபிதான் அது...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரோட்டு கடையில் விற்கும் சால்னாவுக்காகவே சிலர் பரோட்டா , தோசை என வாங்கி சாப்பிடுவார்கள். சில இடங்களில் குழம்பு மட்டும் வாங்கி வீட்டில் இட்லி , தோசை சுட்டு சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி என்னதான் போட்டு சமைக்கிறார்கள் என்று உங்களுக்கும் சந்தேகம் இருந்தால்.. இனிமேல் யோசிக்காதீங்க... இந்த ரெசிபிதான் அது... எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வதக்கி அரைக்க :

எண்ணெய் - 1 tsp

ஏலக்காய் - 1

பட்டை - 1

கிராம்பு - 2

சோம்பு - 1 tsp

கசகசா - 1/2 tsp

பச்சை மிளகாய் - 7

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 8 பல்

தேங்காய் - 1/2 மூடி

கொத்தமல்லி , புதினா - 1/4 கப்

பொட்டுக்கடல் - 1 tsp

குழம்பு தாளிக்க :

எண்ணெய் - 2 tsp

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

கல்பாசி - 1

வெங்காயம் - 1

தக்காளி - 1

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு என மசாலா வகைகளை சேர்த்து தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். பின் இஞ்சி , பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

அனைத்தையும் நன்கு வதக்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

டீக்கடையில் சாப்பிட்ட அதே சுவையில் கஜடா... இந்த 3 பொருள் மட்டும் இருக்கானு பாருங்க...

இப்போது குழம்பு தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மசாலாக்களை தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

பின் தக்காளி சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்கு வதக்கியபின் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

குழம்பு உங்களுக்கு தேவையான பதத்தில் கொதித்து முடித்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ரோட்டுக்கடை சால்னா தயார்.

First published:

Tags: Food recipes