என்னதான் விலைக்கொடுத்து சில ரெஸ்ட்ராண்டுகளில் சாப்பிட்டாலும் ரோட்டுக் கடைகளில் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய உணவுகளில் ருசி அதிகமாக இருக்கும். அதுவும் குறைந்த விலையில் திருப்தியாக சாப்பிட்ட அனுபவமும் இருக்கும். அந்த வகையில் ரோட்டுக்கடைகளில் மிகவும் ஃபேமசாக இருக்கக் கூடிய பூண்டு தோசை எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம். அதுவும் முட்டை ஊற்றி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
பூண்டு பல் - 20 முதல் 25 வரை
சின்ன வெங்காயம் - 20
காய்ந்த மிளகாய் - 7
தக்காளி - 2
புளி - சிறு துண்டு
சீரகம் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு , உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தோசை மாவு
எண்ணெய்
உப்பு - தே.அ
முட்டை – 1 (முட்டை தோசைக்கு)
செய்முறை :
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, சீரகம், உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள்.
பின் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அரைத்த விழுதை அதில் போட்டு கிளறிவிடுங்கள்.
சட்னியில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கிவிடுங்கள்.
வெயிலுக்கு குளுர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் : வீட்டிலேயே செய்து சாப்பிட ரெசிபி..!
அடுத்ததாக மாவு எடுத்து எப்போதும் போல் தோசை சுட்டு அதன் மேன் இந்த சட்னியை ஒரு ஸ்பூன் சேர்த்து சீராக தடவுங்கள்.
பின் அதன் மேல் முட்டை ஊற்றி தடவுங்கள். வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் பூண்டு தோசை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். அப்படியேவும் சாப்பிடலாம். முட்டை வேண்டாம் எனில் தவிர்த்துவிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.