Home /News /lifestyle /

முருங்கைக்கீரையில் இப்படி ஒரு முறை பொரியல் செய்து பாருங்க... வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க...

முருங்கைக்கீரையில் இப்படி ஒரு முறை பொரியல் செய்து பாருங்க... வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க...

முருங்கைக்கீரை பொரியல்

முருங்கைக்கீரை பொரியல்

நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

    முருங்கைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைவாக இருப்பதால் வாரம் ஒரு முறையேனும் உட்கொள்வது நல்லது. அந்த வகையில் நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக் கீரை - 1 கப்
    சின்ன வெங்காயம் - 15
    தேங்காய் எண்ணெய் - 1 tsp
    தேங்காய் - 3 tsp
    உப்பு - தே.அ
    கடுகு - 1/2 tsp
    மஞ்சள் தூள் - 1/2 tsp
    காய்ந்த மிளகாய் - 3



    செய்முறை :

    முதலில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். காய்ந்த மிளகாய் சேர்க்கவும்

    வாழைப்பூ பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வாழைப்பூ கட்லெட் ரெசிபி இதோ..

    பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்ததாக முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டுங்கள்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தட்டுப்போட்டு மூடுங்கள்.

    15 நிமிடங்கள் கழித்து வெந்ததும் வறுத்த தேங்காயை தூவி பிரட்டுங்கள்.

    அவ்வளவுதான் முருங்கைக்கீரை பொரியல் தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Drumstick Leaves

    அடுத்த செய்தி