முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புதினா இலையில் இட்லி பொடி அரைச்சிருக்கீங்களா..? இந்த ரெசிபிதான் அது...

புதினா இலையில் இட்லி பொடி அரைச்சிருக்கீங்களா..? இந்த ரெசிபிதான் அது...

புதினா இலையில் இட்லி பொடி

புதினா இலையில் இட்லி பொடி

சாப்பிடுவோருக்கும் இது புதுமையான சுவையாக இருக்கும். இன்னைக்கே இதை அரைச்சு சுவை பாத்துடுங்க...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதினா சட்னி, புதினா துவையல் செய்துதான் உங்களுக்கு பழக்கம் எனில் இது புதுவித ரெசிபியாக இருக்கும். சாப்பிடுவோருக்கும் இது புதுமையான சுவையாக இருக்கும். இன்னைக்கே இதை அரைச்சு சுவை பாத்துடுங்க...

தேவையான பொருட்கள் :

தனியா - 2 tbsp

கடலை பருப்பு - 2 tbsp

உளுத்தம் பருப்பு - 2 tbsp

எண்ணெய் - 1 tsp

மிளகு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

வெந்தயம் - 1/4 tsp

காய்ந்த மிளகாய் - 10

புதினா - கைப்பிடி அளவு

பூண்டு - 5 பல்

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி முதலில் தனியாவை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே கடாயில் கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதையும் வறுத்த பின் கொட்டிவிடுங்கள்.

பின் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும்.

முட்டையில் இத்தனை வகையாக சமைக்கலாமா..!! டயட் இருப்போர் இதை டிரை பண்ணலாம்..

பருப்பு வகைகளை அரைத்த பின் புதினாவை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். இதை பருப்புடன் கலக்க வேண்டாம். பின் பூண்டையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பருப்பு , காய்ந்த மிளகாய் மற்றும் மசாலா வகைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் புதினா மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பொடி தயார். இதை இட்லி பொடியாகவும் தொட்டுக்கொள்ளலாம். சாதத்தில் நெய் விட்டும் பிசைந்து சாப்பிடலாம்.

First published:

Tags: Mint