எப்போதும் இன்ஸ்டண்டாக சாப்பிட வீட்டில் ரெடிமேட் ஐட்டங்கள் செய்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் அது நம்மால் சமைக்க முடியாத சூழலில் உதவும். சமைத்த உணவே தீர்ந்து போனாலும் பசி என்று வருவோருக்குக் கூட இன்ஸ்டண்டாக இந்த ரெடிமேட் உணவுப் பொருட்களை பரிமாறலாம். ரெடிமேட் உணவுப் பொருட்கள் என்று வரும்போது அது வீட்டில் நம் கைப்பட செய்ததாக இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட கலப்படங்கள் நிறைந்த ரெடிமேட் உணவுப் பொருட்களை கடையில் வாங்குவதை தவிருங்கள். அந்தவகையில் பூண்டு தொக்கு எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம். இது 10 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை இருக்கும்.
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - 1 1/2 குழிக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 1 கப்
இஞ்சி - 1/2 துண்டு
புளி - சின்ன எலுமிச்சை அளவு
செய்முறை :
கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.
பின் மிதமான தீ வைத்து காய்ந்த மிளகாய் போட்டு வதக்க வேண்டும். கருகாமல் வதக்கி எடுக்க வேண்டும்.
பின் மிளகாய்களை எடுத்துவிட்டு பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
அதோடு இஞ்சியும் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
இனி மாவு பிசையத் தேவையில்லை... 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற பரோட்டா செய்ய தெரியுமா..? இதுதான் அந்த ராகசியம்..!
இறக்குவதற்கு முன் புளியை துண்டு துண்டாக பிச்சி போட்டு வதக்குங்கள்.
அனைத்தையும் நன்கு வதக்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வையுங்கள்.
இப்போது மிக்ஸியில் காய்ந்த மிளகாயை முதலில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயார்.
இதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த தொக்கை போதுமான அளவு சேர்த்து பிரட்டி சாப்பிடலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.