Home /News /lifestyle /

கேரட் , முட்டைகோஸ் இருந்தால் போதும்.. இப்படியொரு பொரியலை நீங்க சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க...

கேரட் , முட்டைகோஸ் இருந்தால் போதும்.. இப்படியொரு பொரியலை நீங்க சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க...

கேரட் , முட்டைகோஸ்

கேரட் , முட்டைகோஸ்

இதை பலரும் திருமணப் பந்தியில் திரும்பத் திரும்ப கேட்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட நினைத்தால் உங்களுக்கான ரெசிபி இதோ...

கேரட் மற்றும் முட்டை கோஸ் பொரியல் திருமண விருந்துகளில் வைக்கப்படும் அருசுவை பொரியலாகும். இதை பலரும் திருமணப் பந்தியில் திரும்பத் திரும்ப கேட்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட நினைத்தால் உங்களுக்கான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

கேரட் - 1 கப்
முட்டைகோஸ் - 1கப்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
பாசிப்பருப்பு - 1/4 கப்
பூண்டு - 3
சீரகம் - 1 tsp
வெங்காயம் - 2
தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே.அ



செய்முறை :

கேரட் மற்றும் கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய் துருவிக்கொள்ளவும்.

சிறு பருப்பை தனியாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , சீரகம் கறிவேபிளை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின் பூண்டை இடித்துபோட்டு வதக்கவும். அடுத்ததாக வெங்காயம் சேர்க்கவும்.

கேரட்டை வாரத்தில் ஒரு முறையேனும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளை பெறலாமா..? நீங்களே ஆச்சரியப்படுவீங்க...

இப்போது கேரட், கோஸ் மற்றும் வேக வைத்த சிறு பருப்பு சேர்த்து கிளறிவிடவும்.

கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

5 நிமிடங்கள் தட்டுப்போட்டு மூடி வேக வையுங்கள்.

இறக்கும் முன் தேங்காய் துருவலை தூவி கிளறிவிடவும். பின் 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் கேரட் , கோஸ் பொரியல் தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cabbage, Carrot

அடுத்த செய்தி