பப்பாளிக்காய் கூட்டு செஞ்சு பாத்திருக்கீங்களா...? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!

பப்பாளிக்காய் கூட்டு செஞ்சு பாத்திருக்கீங்களா...? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!
பப்பாளிக்காய் கூட்டு
  • Share this:
பழுக்காத காயாக இருக்கும் பப்பாளியை வைத்து அருமையான சுவையில் கூட்டு செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பப்பாளிக்காய் - 2 கப்


பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சிறு பருப்பு - 1/3 கப்மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அ

அரைக்க :

தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 tsp

மதுரை ஸ்டைல் ஆட்டு மூளை வறுவல் - எப்படி செய்வது..?

தாளிக்க :

எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை/ கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் பப்பாளியின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள். அதோடு சிறு பருப்பு, தக்காளி , பச்சை மிளகாய்,மஞ்சள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

தயிர் இருந்தால் போதும்... இட்லி, தோசைக்கு நொடியில் அசத்தல் சட்னி தயார் - ரெசிபி இதோ...!

2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் போனதும் திறங்கள். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

அதை அப்படியே அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

அதேசமயம் மற்றொரு கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பப்பாளிக்காய் கூட்டு தயார்.

 

 

 

 
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading