ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ரம்ஜான் விருந்தை ஸ்பெஷலாக்கும் ஷீர் குர்மா : எளிமையாக செய்யக்கூடிய ரெசிபி..!

ரம்ஜான் விருந்தை ஸ்பெஷலாக்கும் ஷீர் குர்மா : எளிமையாக செய்யக்கூடிய ரெசிபி..!

ஷீர் குர்மா

ஷீர் குர்மா

வீட்டில் நீங்களும் ஷீர் குர்மா செய்ய ஆசைப்பட்டால் இதோ ரெசிபி...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரம்ஜான் என்றாலே ஷீர் குர்மா கட்டாயம் இடம் பெறும். முஸ்லீம் விருந்து என்றாலே பிரியாணிக்கு பின் அனைவரும் எதிர்பார்ப்பது ஷீர் குர்மாவைத்தான். அந்த வகையில் வீட்டில் நீங்களும் ஷீர் குர்மா செய்ய ஆசைப்பட்டால் இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்

ருமானி சேமியா - 2

நெய் - 2 ஸ்பூன்

முந்திரி , பாதாம் , பிஸ்தா, பேரிச்சை , சாரப்பருப்பு - கையளவு

ஏலக்காய் பொடி - ஒரு சிடிகை,

சர்க்கரை - 1/2 கப்,

ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்

குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்

செய்முறை :

நெய்யை நன்கு காய வைத்து நட்ஸுகளை பொன்னிறமாக வதக்கிக் தனியாக வைத்துவிடுங்கள்.

இதேபோல் சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்.

ரம்ஜான் 2022 : இப்தார் விருந்தில் இந்த 4 ரெசிபீஸை கட்டாயம் டிரை பண்ணிப்பாருங்க!

அதேசமயம் பாத்திரத்தில் பாலை நன்குக் காய்ச்சவும். நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும். சர்க்கரை சேர்க்கவும்.

வெந்ததும் அணைத்துவிடவும்.பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர் , ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

சுவையான ஷீர் குர்மா தயார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Ramzan, Sweet recipes