கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ரம்ஜானன்று இந்த கிண்ணத்தப்பம்தான் பிரதான உணவு. பிரியாணியுடன் இந்த கிண்ணத்தப்பம்தான் இனிப்பு உணவாக செய்து பரிமாறப்படுகிறது. இதை விருந்தினர்களுக்கும் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். அந்த வகையில் நீங்களும் இந்த ரம்ஜானுக்கு வீட்டில் செய்து பாருங்கள். எளிமையான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
பச்சஅரிசி - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
முந்திரி , திராட்சை - கையளவு
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
கிண்ணத்தப்பம் செய்ய முதலில் அரிசியை ஊற வைக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஊறியிருக்க வேண்டும்.
இதற்கிடையில் வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஊறியதும் அதை கழுவி ஒரு ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் கரைத்த வெல்லத் தண்ணீரை பாதி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
ரம்ஜானுக்கு மட்டன் தொக்கு நொடியில் செய்திட சிம்பிள் ரெசிபி..!
பின் மீதியிருக்கும் வெல்லத்தண்ணீரையும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்ததும் அதை வடிகட்டியில் வடித்துக்கொள்ளுங்கள். இதனால் கொஞ்சம் நர நரவென இருக்கும் அரிசியை எடுத்துவிடலாம். ஏனெனில் அப்போதுதான் கின்னத்தப்பம் சாஃப்ட்டாக வரும்.
வடிகட்டியதும் அதில் முதலில் எடுக்கப்பட்ட தேங்காய் பால் ஒரு கப் சேர்த்து கலந்துக்கொள்ளுங்கள்.
கலந்ததும் ஒரு தட்டையான கிண்ணம் அல்லது தட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் அடியில் வெண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். பின் அரைத்த மாவை நிரம்ப ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் மேல் முந்திரி , திராட்சையை தூவி விடுங்கள்.
பின் அதை ஸ்டீமர் அல்லது இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதற்கு மேல் இந்த கிண்ணத்தப்பம் மாவு கிண்ணத்தை வையுங்கள். இல்லையெனில் இட்லி தட்டிலேயே கூட அந்த மாவை ஊற்றி இட்லி சுடுவது போல் சுட்டு எடுக்கலாம். 10 நிமிடங்கள் கழித்து திறந்து பாருங்கள். கிண்ணத்தப்பம் ரெடியாக இருக்கும்.
எடுத்ததும் ஓரங்களை சுற்றி கத்தியால் வெட்டிவிட்டு கவிழுத்துப் போட்டால் அழகாக வந்துவிடும். பின் அவற்றை பரிமாறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.