ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காலை உணவை எளிதாக்கும் ராகி சேமியா... 10 நிமிடத்தில் அசத்தலான டிஃபன் தயாராகிடும்...

காலை உணவை எளிதாக்கும் ராகி சேமியா... 10 நிமிடத்தில் அசத்தலான டிஃபன் தயாராகிடும்...

 ராகி சேமியா

ராகி சேமியா

ராகியில் சமைப்பது என்பதும் எளிதான விஷயம்தான். சீக்கிரமே வேலை முடிந்துவிடும். அந்த அவகையில் ராகி சேமியாவில் புட்டு செய்துகொடுங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேழ்வரகு என்று சொல்லக்கூடிய ராகியில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைவாக இருக்கிறது. அதேசமயம் இந்த உணவு வயிறை நிறைவு செய்து நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமலும் இருக்கும். அதேசமயம் ராகியில் சமைப்பது என்பதும் எளிதான விஷயம்தான். சீக்கிரமே வேலை முடிந்துவிடும். அந்த அவகையில் ராகி சேமியாவில் புட்டு செய்துகொடுங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

ராகி சேமியா - 2 பாக்கெட்

உப்பு - 1/2 tsp

தேங்காய் - 1/2 tsp

சர்க்கரை - 100 கிராம்

ஏலக்காய் - 5

நெய் - 1 tsp

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதை கொஞ்சம் சூடேற்றுங்கள். தண்ணீர் அந்த பாத்திரத்தின் முக்கால் பங்காக இருக்க வேண்டும்.

அது சூடேறியதும் அதை இறக்கிவிட்டு உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.

பின் சேமியாவை அதில் சேர்த்து கலந்துவிடுங்கள். அது கொஞ்சம் ஊறியதும் தண்ணீரை இறுத்துவிடுங்கள். நீண்ட நேரம் ஊறக்கூடாது. இல்லையெனில் சேமியா குழைந்துவிடும்.

இப்போது இட்லி குண்டானில் தண்ணீர் ஊற்று காய வையுங்கள்.

அது கொதித்து வரும்போது இட்லி தட்டில் துணியை விரித்து அதில் இறுத்து வைத்துள்ள சேமியாவை வையுங்கள். நன்கு பரவலாக வைக்க வேண்டும்.

Lunch Box Recipes : மதிய உணவுக்கு இந்த சூப்பரான முட்டை சாதம் செய்து கொடுங்கள்...

இப்போது அந்த தட்டை இட்லி குண்டானில் வைத்து மூடி விடுங்கள்.

10 நிமிடங்கள் வெந்தால் போதும். வெந்ததும் இறக்கிவிட்டு அகலமான பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்கா, நெய் சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.

சர்க்கரை வேண்டாம் என நினைத்தால் வெல்லமும் சேர்க்கலாம்.

அவ்வளவுதான் ராகி சேமியா புட்டு தயார். இதை குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள். மதிய உணவுக்கும் கட்டிக்கொடுக்கலாம்.

First published:

Tags: Ragi