முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கேழ்வரகு மாவில் அல்வா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

கேழ்வரகு மாவில் அல்வா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

கேழ்வரகு மாவில் அல்வா

கேழ்வரகு மாவில் அல்வா

கேழ்வரகு மாவில் இப்படி அல்வா செய்து சாப்பிடுங்கள். பின் அந்த சுவையை மறக்கவே முடியாது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுதானிய உணவுகள் என்றாலே அது ஆரோக்கியம் நிறைந்தது. குறிப்பாக கேழ்வரகு தரும் நன்மைகள் எண்ணற்றது. அந்த வகையில் கேழ்வரகு மாவில் இப்படி அல்வா செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்

வெல்லம் - 2 கப்

நெய் - 200 ML

உப்பு - 1 சிட்டிகை

ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

சுக்கு - 1 சிட்டிகை

முந்திரி - 1 ஸ்பூன்

உலர் திராட்சை - 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் வெல்லப் பாகு தயார் செய்ய வேண்டும். அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கட்டிகளின்றி தூளாக்கி கலந்து அடுப்பில் வைக்கவும். பின் அது உருகி வந்ததும் வடிகட்டி பாகு எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அதில் கேழ்வரகு மாவு கொட்டி நன்கு கட்டிகளின்றி கரைத்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து அதில் நெய் விட்டு உருக்கிக்கொள்ளுங்கள்.

பின் அதில் கரைத்த கேழ்வரகு மாவு சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள்.

Also Read : நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அப்போதுதான் அடிப்பிடிக்காது.

நெய் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் ஜெல்லி போல் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது மற்றொரு கடாய் வைத்து நெய் விட்டு முந்திரி சேர்த்து வறுத்து கிளறிய அல்வாவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுக்கு , ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

அவ்வளவுதான் கேழ்வரகு மாவு அல்வா தயார்.

First published:

Tags: Besan halwa, Ragi