Home /News /lifestyle /

குளிர்காலத்தில் புதினா சட்னி சாப்பிடுவது மிகவும் நல்லது...நொடியில் அரைக்க ரெசிபி இதோ...

குளிர்காலத்தில் புதினா சட்னி சாப்பிடுவது மிகவும் நல்லது...நொடியில் அரைக்க ரெசிபி இதோ...

சட்னி

சட்னி

முடிந்தவரை தினசரி உணவில் துவையலாகவோ அல்லது சட்னியாகவோ சேர்த்துக்கொள்ளலாம்.

குளிர்கால உபாதைகளுக்கு புதினா நல்ல மருந்து. முடிந்தவரை தினசரி உணவில் துவையலாகவோ அல்லது சட்னியாகவோ சேர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் இரவு உணவு அல்லது காலை உணவுக்கு புதினா சட்னி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புதினா - அரை கப்
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
பூண்டு - 4
இஞ்சி - 2 துண்டு
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தேங்காய் - 1 கப்
புளி - சிறிதளவு
உப்பு - தே.அ
பெருங்காயத்தூள் - 1சிட்டிகை

தாளிக்க :

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்



செய்முறை :

முதலில் தேவையான பொருட்களை தயார் செய்துகொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேருங்கள். பின் காய்ந்த மிளகாய் இஞ்சி , பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்குங்கள் .

வதங்கியதும் புதினா , கொத்தமல்லி, புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

பச்சை பட்டாணியில் தோசை சுட்டு சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கு செய்து சுவையை அனுபவியுங்கள்...

சூடு தணிந்ததும் வதக்கிய பொருட்களை சேர்த்து அதோடு தேங்காய் , உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் அதை ஒரு பாத்திரத்தில் வழித்துக்கொள்ளுங்கள்.

இப்போது தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

அவ்வளவுதான் புதினா சட்னி தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Mint Chutney

அடுத்த செய்தி