இறாலை எந்த பக்குவத்தில் செய்தாலும் அதன் ருசியும் மணமும் மாறாது. சொத்தப்பலாகவே அந்த சமையல் இருந்தாலும் அதற்கு ருசி சேர்த்துவிடும். ஆனால் அப்படியெல்லாம் சொதப்பாமல் பக்குவமான பதத்தில் மொறுமொறுவென எப்படி இறால் வறுவல் ( prawn fry ) செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
• இறால் - ½ கிலோ
• தேங்காய் எண்ணெய் - 1 ½ டீஸ்பூன்.
• மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
• உப்பு - ½ தேக்கரண்டி
• எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
• கொத்தமல்லி இலைகள் - 2-3 டீஸ்பூன், நறுக்கியது
செய்முறை :
இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். சுத்தம் செய்யும் போது அதன் வாலை மட்டும் எடுக்காதீர்கள். அதுதான் மொறு மொறு சுவைக்கு நன்றாக இருக்கும்.
இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். பின் அடுப்பை சிறு தீயில் வைத்துக்கொண்டு மிளகாய் தூள் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.
சிறு தீயில் வையுங்கள். இல்லையெனில் தூள் கருகிவிடும்.
இப்போது இறாலை சேர்த்து நன்கு பிரட்டிவிடுங்கள். பின் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு வறுக்கவும். 2 நிமிடத்திற்கு வறுத்தால் மொறு மொறுவென இறால் ஃபிரை தயார்.
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.