Home /News /lifestyle /

சப்பாத்திக்கு சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி : ரெசிபி இதோ..!

சப்பாத்திக்கு சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி : ரெசிபி இதோ..!

குஜராதி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி ( image source : archana's kitchen )

குஜராதி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி ( image source : archana's kitchen )

இன்று பலரது இல்லங்களிலும் இரவு சப்பாத்தி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

    இன்று பலரது இல்லங்களிலும் இரவு சப்பாத்தி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. உங்கள் வீட்டிலும் சப்பாத்திதான் எனில் போரடிக்கும் சைட் டிஷ்களை விட இப்படி வித்தியாசமான க்ரேவி வகைகளை ட்ரை செய்து பாருங்கள். புது சுவையாக இருக்கும்.  குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி செய்முறை இதோ...

    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 4
    எண்ணெய் - 2 tsp
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 1
    பட்டை - 1 துண்டு
    ஏலக்காய் - 2
    சோம்பு - 1/2 tsp
    பிரியாணி இலை - 1
    தக்காளி - 2
    மஞ்சள் பொடி - 1/2 tsp
    மிளகாய் பொடி - 1 tsp
    கரம் மசாலா - 1 tsp
    தனியா பொடி - 1 tsp
    உப்பு - தே . அ



    செய்முறை :

    இந்த கிரேவியை முற்றிலும் குக்கரில் தான் செய்ய வேண்டும். எனவே குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றுங்கள்.

    காய்ந்ததும் பட்டை, இலை, ஏலக்காய் போடுங்கள். பொறிந்ததும் இஞ்சி , வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    வதங்கியதும் தக்காளி சேருங்கள். பின் மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , தனியா பொடி , கரம் மசாலா பொடி சேர்த்து வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேருங்கள்.

    தற்போது உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள்.

    உப்பு சரி பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போடுங்கள். 4 -5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    குக்கர் பிரஷர் தானாக வெளியேறும் வரை காத்திருங்கள். காற்று வெளியேறியதும் மூடியைத் திறந்து காரம் சுவை சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

    போதுமான கெட்டிப்பதம் இருந்தால் கிண்ணத்தில் மாற்றி பறிமாறுங்கள். இல்லையெனில் சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி