ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சிக்கன் குழம்பு சுவையில் உருளைக்கிழங்கு கிரேவி : சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்

சிக்கன் குழம்பு சுவையில் உருளைக்கிழங்கு கிரேவி : சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்

உருளைக்கிழங்கு கிரேவி

உருளைக்கிழங்கு கிரேவி

உங்கள் வீட்டிலும் சப்பாத்திதான் எனில் போரடிக்கும் சைட் டிஷ்களை விட இப்படி வித்தியாசமான க்ரேவி வகைகளை ட்ரை செய்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்று பலரது இல்லங்களிலும் இரவு சப்பாத்தி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. உங்கள் வீட்டிலும் சப்பாத்திதான் எனில் போரடிக்கும் சைட் டிஷ்களை விட இப்படி வித்தியாசமான க்ரேவி வகைகளை ட்ரை செய்து பாருங்கள். புது சுவையாக இருக்கும். குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி செய்முறை இதோ...

தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு - 4

எண்ணெய் - 2 tsp

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 1

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 2

சோம்பு - 1/2 tsp

பிரியாணி இலை - 1

தக்காளி - 2

மஞ்சள் பொடி - 1/2 tsp

மிளகாய் பொடி - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

தனியா பொடி - 1 tsp

உப்பு - தே . அ

செய்முறை :

இந்த கிரேவியை முற்றிலும் குக்கரில் தான் செய்ய வேண்டும். எனவே குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றுங்கள்.

காய்ந்ததும் பட்டை, இலை, ஏலக்காய் போடுங்கள். பொறிந்ததும் இஞ்சி , வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் தக்காளி சேருங்கள். பின் மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , தனியா பொடி , கரம் மசாலா பொடி சேர்த்து வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேருங்கள்.

தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

தற்போது உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள்.

உப்பு சரி பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போடுங்கள். 4 -5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

குக்கர் பிரஷர் தானாக வெளியேறும் வரை காத்திருங்கள். காற்று வெளியேறியதும் மூடியைத் திறந்து காரம் சுவை சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போதுமான கெட்டிப்பதம் இருந்தால் கிண்ணத்தில் மாற்றி பறிமாறுங்கள். இல்லையெனில் சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

அவ்வளவுதான் சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.

First published:

Tags: Chapathi, Potato recipes