ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உருளைக்கிழங்கு ஃபிரை மகாராஷ்டிரா ஸ்டைலில் இப்படி செய்து பாருங்கள் : குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க...

உருளைக்கிழங்கு ஃபிரை மகாராஷ்டிரா ஸ்டைலில் இப்படி செய்து பாருங்கள் : குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க...

உருளைக்கிழங்கு ஃபிரை

உருளைக்கிழங்கு ஃபிரை

மதிய உணவுக்கு உருளைக்கிழங்கு ஃபிரை என்று சொல்லிவிட்டால் போதும் விருந்து உணவே செய்து கொடுத்த மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உருளைக்கிழங்கில் எந்த டிஷ் செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மதிய உணவுக்கு உருளைக்கிழங்கு ஃபிரை என்று சொல்லிவிட்டால் போதும் விருந்து உணவே செய்து கொடுத்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். அந்த வகையில் அவர்களுக்கு எப்போதும் போல் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு பொரியல் செய்து கொடுங்கள். ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3

காய்ந்த மிளகாய் - 7

புளி- சின்ன நெல்லிக்காய் அளவு

பூண்டு - 5 பற்கள்

நல்லெண்ணெய் - 2 tbsp

கடுகு - 1/2 tsp

உளுத்தம் பருப்பு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

கறிவேப்பிலை -சிறிதளவு

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் பொரியல் செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். புளியையும் தனியாக ஊற வையுங்கள்.

உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள்.

அது வேகும் சமயத்தில் ஊற வைத்த மிளகாய், புளி , பூண்டு இவை மூன்றையும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு உருளைக்கிழங்கு வெந்ததும் அதை தோல் உறித்து நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த குழம்பு செய்தாலும் அதன் சுவையையும் மணத்தையும் கூட்ட வெங்காய வடகம் : ரெசிபி இதோ..

நன்கு வதங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டிவிங்கள். நன்கு பிரட்ட பிரட்ட மொறு மொறு சுவையில் வரும்.

மிதமான தீ வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து பிரட்டினால் பொரியல் தயார்.

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மகாராஷ்டிரா சுவையில் உருளைக்கிழங்கு பொரியல் தயார்.

First published:

Tags: Maharashtra, Potato