முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எண்ணெய் இல்லாமல் பூரி சுடுவது சாத்தியமா..? தண்ணீரிலேயே சுட்டு எடுக்க இந்த டிப்ஸை கவனியுங்கள்...

எண்ணெய் இல்லாமல் பூரி சுடுவது சாத்தியமா..? தண்ணீரிலேயே சுட்டு எடுக்க இந்த டிப்ஸை கவனியுங்கள்...

பூரி

பூரி

எண்ணெய் உணவு என்பதால் அது அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை. ருசிக்காக சாப்பிடலாம் அவ்வளவுதான். அது சில நேரங்களில் செரிக்காது. எனவே அப்படியெல்லாம் இனி ருசிக்காக சாப்பிட்டு கஷடப்பட வேண்டாம். அதே சுவையில் பூரியை எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுட்டு சாப்பிடலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எண்ணெய் உணவு என்பதால் அது அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை. ருசிக்காக சாப்பிடலாம் அவ்வளவுதான். அது சில நேரங்களில் செரிக்காது. எனவே அப்படியெல்லாம் இனி ருசிக்காக சாப்பிட்டு கஷடப்பட வேண்டாம். அதே சுவையில் பூரியை எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுட்டு சாப்பிடலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்

எண்ணெய் – 1 tsp

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் - தே.அ

செய்முறை :

கோதுமை மாவு , உப்பு சேர்த்து பூரிக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதை பூரிக்கு ஏற்ப வட்ட வடிவில் உருட்டிக்கொள்ளுங்கள். அவ்வாறு அனைத்து மாவையும் பிசைந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

தண்ணீர் கொதிநிலையை அடையும்போது ஒரு பூரி மாவை போடுங்கள்.

சாதம் மீந்துவிட்டால் இனி தண்ணீர் ஊற்றி வைக்காதீங்க.. இப்படி மொறுமொறு தோசை சுட்டு சாப்பிடலாம்...

அது ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும் அடுத்த பக்கமும் திருப்பிப் போடுங்கள். மாவு வெந்ததும் அதை எடுத்துவிடுங்கள்.

அப்படி ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும் அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்ற பூரி புஸ்ஸுனு பொங்கி வரும். அவ்வளவுதான் அதை எடுத்து சாப்பிடலாம்.

அவ்வளவுதான் எண்ணெய் இல்லாமல் புஸ் புஸ் பூரி தயார்.

First published:

Tags: Breakfast, Cooking tips