Home /News /lifestyle /

பிரண்டை துவையல் செய்வது இவ்வளவு சுலபமா..? மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும்...

பிரண்டை துவையல் செய்வது இவ்வளவு சுலபமா..? மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும்...

பிரண்டை துவையல்

பிரண்டை துவையல்

இதை எப்படி செய்வது என தெரியாது எனில் இந்த ரெசிபியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரண்டையில் துவையல் செய்து சாப்பிடுவது உணவுக்கு ருசி சேர்ப்பது மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதை எப்படி செய்வது என தெரியாது எனில் இந்த ரெசிபியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    பிரண்டை - 3/4 கப்
    நல்லெண்ணெய் - 2 tbsp
    உளுத்தம் பருப்பு - 3 tbsp
    காய்ந்த மிளகாய் - தே.அ
    இஞ்சி - 1/2 துண்டு
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய் துருவியது - 3 tbsp
    உப்பு - தே.அ



    செய்முறை :

    முதலில் பிரண்டையைக் கழுவி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள். பிரண்டை கையில் பட்டால் அரிக்கும். எனவே கவனமுடன் செய்யுங்கள். தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    தேவையான மற்ற பொருட்களையும் தயார் செய்துகொண்டு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைப் போட்டு வதக்குங்கள்.

    பாலக்கீரையில் பகோடா கூட செய்யலாமா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

    பொன்னிறமாக வந்ததும் காய்ந்த மிளகாய், இஞ்சி என ஒவ்வொரு பொருளாக சேர்த்து வதக்குங்கள். அவற்றை தனியாக தட்டில் வைத்து ஆற வையுங்கள். பின் பிரண்டையை வதக்கிக்கொள்ளுங்கள். சற்று சுருங்கும் அளவு வதக்குங்கள்.

    பின் அதையும் ஆற வைத்து மிக்ஸியில் மொத்தமாக சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே உப்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    அவ்வளவுதான் பிரண்டை துவையல் தயார்.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Food recipes

    அடுத்த செய்தி