Home /News /lifestyle /

வேர்க்கடலை சேர்த்து இப்படியொரு தக்காளி சட்னி செஞ்சிருக்கீங்களா..? இரவு டிஃபனுக்கு டிரை பண்ணுங்க..!

வேர்க்கடலை சேர்த்து இப்படியொரு தக்காளி சட்னி செஞ்சிருக்கீங்களா..? இரவு டிஃபனுக்கு டிரை பண்ணுங்க..!

தக்காளி சட்னி

தக்காளி சட்னி

வேலையை எளிதாக முடிக்க வேண்டும் என நினைத்தால் இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி செய்து பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும்.

இரவு உணவுக்கு அதிக மெனக்கெடல் இல்லாமல் வேலையை எளிதாக முடிக்க வேண்டும் என நினைத்தால் இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி செய்து பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். செய்முறை இதோ...

தேவையான பொருட்கள் :

தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 4
வேர்க்கடலை - 1/4 கப்
புளி - சிறிதளவு
உப்பு - தே.அ



செய்முறை :

அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொதிக்க வையுங்கள்.

கொதிநிலைக்கு வரும் போது தக்காளி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், வேர்க்கடலை சேர்த்து கொதிக்க வையுங்கள்.

தக்காளி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பின் அவற்றை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வையுங்கள்.

பின் மிக்ஸி ஜாரில் அனைத்தியும் சேர்த்து அதோடு புளி மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஜல்ஜீரா பொடியை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி..? உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..

இதை இப்போது மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதை தனியாக ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு , காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேருங்கள்.

அவ்வளவுதான் தக்காளி சட்னி தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chutney

அடுத்த செய்தி