திகட்டத்திகட்ட உங்கள் கைப்பக்குவத்தில் ஒரு பால்கோவா ட்ரீட்: சுடச்சுட சாப்பிட ரெசிப்பி இதோ..

இனிப்பு வகைகளில் பால்கோவா அனைவருக்கும் பிடித்த ஒன்று.

திகட்டத்திகட்ட உங்கள் கைப்பக்குவத்தில் ஒரு பால்கோவா ட்ரீட்: சுடச்சுட சாப்பிட ரெசிப்பி இதோ..
பால்கோவா
  • Share this:
இனிப்பு வகைகளில் பால்கோவா அனைவருக்கும் பிடித்த ஒன்று. கடையில் வாங்குவதைவிட வீட்டிலேயே செய்து உங்கள் கைப் பக்குவத்தில் செய்து சாப்பிட்டால் தனிச்சுவைதான்.  எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்


சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை :

பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு அது கெட்டியான பதத்திற்கு இறுகும் வரை கொதிக்க விடுங்கள். பால் அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிக் கொண்டே இருங்கள்.

நீங்கள் அருந்தும் பாலில் தினம் 2 ஏலக்காய் தட்டிப் போடுங்கள் : ஏன் தெரியுமா..?

நன்கு இறுகி க்ரீமியான நிலையை அடையும்போது சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருந்தால் பால்கோவா நிலையை அடையும். பின் அதில் முற்றிலும் நீர் இறுகி கட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருங்கள்.

இறுகிய நிலை அடையும் போது நெய் ஊற்றிக் கிளறுங்கள்.
இறுதியாக, ஏலக்காய்ப் பொடியைத் தூவிப் பரிமாறுங்கள்.

இந்த பால்கோவாவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரையில் வைத்து சாப்பிடலாம்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading