Home /News /lifestyle /

பாலக்கீரையில் பகோடா கூட செய்யலாமா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

பாலக்கீரையில் பகோடா கூட செய்யலாமா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

பாலக்கீரை பகோடா

பாலக்கீரை பகோடா

மாலையில் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இந்த பாலக்கீரை பகோடா செய்து கொடுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாலக்கீரையில் பல வகையான ரெசிபிகள் உள்ளன. ஆனால் அதில் பகோடா கூட செய்யலாம் என தெரியுமா..? மாலையில் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இந்த பாலக்கீரை பகோடா செய்து கொடுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய பாலக் கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    மல்லித்தூள் - 1/2 tsb
    மிளகாய் தூள் - 1/2 tsb
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தே.அ
    பெருங்காயத்தூள் - 1/2 tsb
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/ கப்



    செய்முறை :

    பாலக்கீரையை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , தூள் வகைகள், உப்பு , கடலை மாவு , அரிசி மாவு சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சம் போல் தண்ணீர் தெளித்து நன்கு பிசைய வேண்டும்.

    நன்கு பிசைந்ததும் கடாய் வைத்து வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து போடுங்கள்.

    நட்ஸ் பாயாசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? சிம்பிளான ரெசிபி இதோ....

    பின் பொன்னிறமாக பொறித்ததும் எடுத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் பாலக்கீரை பகோடா தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Evening Snacks

    அடுத்த செய்தி