• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வேக வைக்காத பாசிப்பருப்பு சாலட் : குழந்தைகள் முதல் டயட் இருப்பவர்கள் வரை சாப்பிடலாம்...

வேக வைக்காத பாசிப்பருப்பு சாலட் : குழந்தைகள் முதல் டயட் இருப்பவர்கள் வரை சாப்பிடலாம்...

பாசிப்பருப்பு சாலட்

பாசிப்பருப்பு சாலட்

சைவ விரும்பிகள் புரோட்டீன் சத்தாகவும் சாப்பிடலாம். எனவே இதை மாலை அல்லது காலை வேளையில் இப்படி ஹெல்தியான முறையில் சாலட் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

  • Share this:
    பாசி பருப்பு விட்டமின் ஏ, பி , சி மற்றும் ஈ என ஊட்டச்சத்துகள் நிறைந்தது. அதோடு கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்றவையும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். சைவ விரும்பிகள் புரோட்டீன் சத்தாகவும் சாப்பிடலாம். எனவே இதை மாலை அல்லது காலை வேளையில் இப்படி ஹெல்தியான முறையில் சாலட் செய்து சாப்பிட்டு பாருங்கள். வயிறும் நிறையும். ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பாசி பருப்பு- 3/4 கப்
    துருவிய தேங்காய் - 1/2 கப்
    கொத்தமல்லி - தே.அ
    எலுமிச்சை - அரை மூடி
    கேரட் - 1

    தாளிக்க :

    எண்ணெய் - தே.அ
    பச்சை மிளகாய் - 1
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கடுகு - 1 tsp
    உப்பு - தே.அ



    செய்முறை :

    பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் அதை வடிகட்டி பயிரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதில் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, கேரட் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அசத்தலான சுவையில் இளநீர் பாயாசம் செய்ய தெரியுமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி

    இறுதியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை தாளித்து பருப்பில் கொட்டுங்கள்.

    இப்போது போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யுங்கள். அவ்வளவுதான் சாலட் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள், டயட் இருப்பவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

     

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: