புதினா மழைக்கால தொற்றுகளுக்கு சிறந்த உணவு. எனவே புதினாவை ஏதாவதொரு வகையில் வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளுக்கு இப்படி சாதமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க. ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 tsp
இஞ்சி - 1/4 tsp (சீவியது )
பூண்டு - 3 பற்கள்
துருவிய தேங்காய் - 2 tsp
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1
பிரிஞ்சு இலை - பாதி அளவு
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது எண்ணெய் - 1 tsp
கூடுதல் புதினா இலைகள் மற்றும் முந்திரி - தாளிக்க
செய்முறை :
பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் சோறை பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும்.
அந்த சமயத்தில் ஜாரில் புதினா, கொத்தமல்லி, எலுமிச்சஒ சாறு, இஞ்சி, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முன் கூட்டியே அரைத்து வைக்க வேண்டாம். கருத்துவிடும்.
கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஏலக்காய், இலை, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து
பொன்னிறமாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்டை சேர்க்கவும்.
வெங்காயம் போட்டு ப்ரக்கோலி பொரியல் இப்படி செஞ்சு பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது..!
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதை 2 - 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
தற்போது அந்தக் கலவையில் ஆற வைத்துள்ள சோற்றை சேர்த்து நன்குப் பிறட்டவும். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் ஃபிரெஷான புதினா இலைகளை சேர்த்துக் கிளரவும்.
குறிப்பு : தேவைப்பட்டால் சுவைக் கூட்ட உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டானியும் சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான புதினா சாதம் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mint