புதினா ரசம் வெச்சு சாப்பிட்டிருக்கீங்களா...? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

புதினாவை வைத்து மிளகு சீரகம் தட்டி புதினா ரசம் வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். அட்டகாசமாக இருக்கும். 

புதினா ரசம் வெச்சு சாப்பிட்டிருக்கீங்களா...? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!
புதினா ரசம்
  • Share this:
புதினா சளி, இருமலுக்கு நல்ல மருந்து.  எனவே புதினாவை வைத்து மிளகு சீரகம் தட்டி புதினா ரசம் வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2


புதினா - ஒரு கப்
புளி - சிறிதளவு
எண்ணெய் - 1 tspசீரகம் - 1 tsp
மிளகு - 1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அ
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் - 1 tsp
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 1



செய்முறை :

புதினாவையும் தக்காளியின் பாதியையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த புதினா பேஸ்ட் மற்றும் புளி தண்ணீரை சேர்த்து காய்ச்சவும்.

பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிடவும்.

அடுத்ததாக கிண்ணத்தில் மீதி தக்காளியை கையிலேயே கரைத்து அரைத்த மிளகு சீரத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?

அடுத்ததாக உப்பு , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைத்துள்ள புதினாவை சேர்த்துக் கரைத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது கிண்ணத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். நுரை பொங்கி வரும்போது உடனே அதன் மீது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பின் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து ரசத்தில் ஊற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading